தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்னக விடுதலை போராளிகள் வரலாறு பாட புத்தகங்களில் இடம் பெறணும் - எம்.பி கார்த்திக் சிதம்பரம் - மருது சகோதரர்கள் குரு பூஜை

தென்னகத்தில் விடுதலைக்கு போராடியவர்களின் வரலாறு இந்திய பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம் தொடர்பான காணொலி
செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம் தொடர்பான காணொலி

By

Published : Oct 25, 2021, 6:30 AM IST

சிவகங்கை: ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி, மரணத்தை முத்தமிட்ட மருது சகோதரர்களின் 220ஆவது குருபூஜை நேற்று (அக்.24) கொண்டாடப்பட்டது. இதனையடுத்து திருப்பத்தூரில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் நினைவிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் நேற்று மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்திய விடுதலை இயக்கத்தில் போரிட்ட தென்னகத்தை சேர்ந்தவர்கள் பற்றிய வரலாறு, இந்திய பாடப் புத்தகங்களில் இடம் பெறாமல் மறைக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம் தொடர்பான காணொலி

ஜான்சிராணிக்கு முன்னரே, வேலு நாச்சியார் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டார். இருப்பினும் அவர் குறித்த எந்த ஒரு வரலாறும், வட இந்திய பாட புத்தகங்களில் இடம் பெறாதது மிகவும் வேதனைக்குரிய விஷயம். தமிழ்நாட்டில் விடுதலைக்காக போரிட்ட வீரர்கள் குறித்து, இந்திய பாட புத்தகங்களில் வெளிவர தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:இந்தியில் மட்டுமே வகுப்பா..? - சு.வெங்கடேசன் எம் பி கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details