சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை பார்வையிட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வந்ததுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த கீழடி அகழாய்வுப் பொருட்களை பார்வையிட்டார்.
அத்துடன் கலைநிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 'மத்திய அரசு பிரதிநிதியான ஆளுநருக்கு கருத்தியல் ரீதியாக ஜனநாயக முறைப்படி, எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ஏற்கத்தக்கது. அதேநேரத்தில் ஆளுநரின் பாதுகாப்பிற்கு இடையூறு நேர்ந்திருந்தால், அதனை நான் கண்டிக்கிறேன்.
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பேட்டி அண்ணாமலையின் கூற்று ஏற்புடையதல்ல: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிற பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்தில், அவர் முன்னாள் காவல்துறை அலுவலரான அவருக்கு கருப்புக்கொடி காட்டுவதெல்லாம் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக் கூறுவது ஏற்புடையது அல்ல. அவர் எப்படி காவல்துறை அலுவலராக இருந்தார் என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.
அண்ணாமலை, இளையராஜாவிற்கு விருதிற்கு பரிந்துரைப்பது என்பது அவரது ஜனநாயக உரிமை; அது வழங்கப்படுவது என்பது அந்த கருத்தை ஏற்பது என்பது பின்னர் தெரியும். காங்கிரஸுக்கு ராஜ்ய சபாவில் எம்.பி., பதவி வழங்கப்படுமா என்கிற கேள்விக்கு திமுக, காங்கிரஸ் தேர்தல் உடன்பாட்டின் படி ஒரு எம்.பிக்கு வாய்ப்புள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்