தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிந்துகொள்ளாதது வருத்தம்’ - எம்பி கார்த்தி சிதம்பரம் - உள்ளாட்சி பிரதிநிதிகள் எம்பி கார்த்தி சிதம்பரம்

அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிந்துகொள்ளாதது வருத்தமளிக்கிறது என எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நடந்த கூட்டம்
Etv Bharat உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நடந்த கூட்டம்

By

Published : Sep 22, 2022, 10:04 PM IST

சிவகங்கைஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வளர்ச்சி கூட்டத்தில் எம்பி கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டார். அங்கு, அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிந்துகொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கினைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம் எம்பி கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன், காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நடந்த கூட்டம்

இதில் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இந்நிலையில் அந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து எம்பி கார்த்தி சிதம்பரம் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்ட நிலையில் அதுகுறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பதிலளிக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்தி சிதம்பரம் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிந்துகொள்ளாமல் இருப்பது மிகவும் வருத்தமளிப்பதாகவும் , அதனை முழுமையாக உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிந்து கொண்டால் மட்டுமே மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:'நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை மாணவர்கள் தேர்வுக்கு படித்துத்தான் ஆக வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details