சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை திமுக தலைவரும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன், மதுரை மக்களவை உறுப்பினர் சு. செங்கடேசன், திமுக முன்னாள் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழரின் வரலாற்றுப் பெருமையை பறைசாற்றும் விதமாக கீழடி அமைந்துள்ளதாகவும் அதனை அகழாய்வு செய்துவரும் தமிழ்நாடு அரசுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.