சிவகங்கை: சிங்கம்புணரி அருகேவுள்ள துவார் ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் முப்பதுக்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் 40 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியங்களின் தலைவர்களின் மாதாந்திர கூட்ட அமர்வு தொகை 5 மற்றும் 10 மடங்காக உயர்த்தப்பட்டுள்து.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பிலிருந்த அதிமுகவினர், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு எவ்வித வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை” என்றார்.
இதையும் படிங்க:Video: பெண்ணிடம் தவறாக நடந்த ஆட்டோ ஓட்டுநருக்கு விளக்கமாற்றால் அடி