சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நேற்றிரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், இஸ்லாமியர்களை அதிமுக ஒதுக்குவதில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் தங்களை ஒதுக்குவதாக வருத்தம் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் சட்டையை பிடித்து கேட்கலாம் என்றும், மக்கள் எங்களை எளிதில் அணுக முடியும் என்றும் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இதுகுறித்து பிற அமைச்சர்கள் பேசி தகுந்த நேரம் பார்த்து காத்திருப்பதாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இன்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாஸ்கரன் பாஜகவுடன் உள்ள எங்களது கூட்டணியை பிரிக்க முடியாது என்று திடீர் பல்டி அடித்தார். சமீப காலமாக அமைச்சர் பாஸ்கரன் இதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை பேசி வருவது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவையும் எங்களையும் பிரிக்க முடியாது