சிவகங்கை: காரைக்குடியில் உள்ள ஆவின் தொழிற்சாலையினை ஆய்வு செய்த பால்வளத் துறை அமைச்சர் நாசர், ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு சுமார் ரூ.25 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் பால் 36 லட்சம் லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 41 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. இதே போல கடந்த ஆட்சியில் ஆவின் பால் விற்பனை 26 லட்சம் லிட்டராக இருந்தது. தற்போது 28 லட்சம் லிட்டராக விற்பனை உயர்ந்து. ஆவின் பொருள்கள் ஏழு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆக உள்ளன.
அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது போல கடந்த ஆட்சியில் அனைத்து துறையிலும் ஊழல் நடந்துள்ளது. அது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில், அதிமுகவை சேர்ந்த விஜய நல்லதம்பி விசாரணையின்போது மூன்று கோடி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்ததாக கூறினார். ஆவினில் கடந்த ஆட்சியில் ஸ்வீட் இண்டேன் போடாமல் எடுத்துச் சென்றுள்ளார்.
மேலும், ஆவினில் 236 பேர் விதிகளுக்குப் புறம்பாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல், பட்டாசு தொழிற்சாலைகளில் வாங்கியத்தில் ஊழல், வசூல் வேட்டை நடந்துள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ஊழல்' - சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை