தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கை அருகே ராணுவத்தளவாடங்கள் கண்காட்சி; ஆர்வமுடன் கலந்துகொண்ட மாணவர்கள் - Dil Se Desi

சிவகங்கை அருகே இலுப்பைகுடியிலுள்ள இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் நடந்த ராணுவத் தளவாடங்களை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 11, 2022, 10:38 PM IST

சிவகங்கைஅருகே இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை பயிற்சி மையத்தில் சுதந்திர தின விழாயொட்டி, இன்று (ஆக.11) நடந்த ராணுவ தளவாடங்களை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கண்டுகளித்தனர்.

சுதந்திர தினத்தை விழாவாக கொண்டாட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை ஏற்று இல்லங்கள் தோறும் தேசியக்கொடியை ஏற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சியை அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை அருகே இலுப்பைகுடியிலுள்ள இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி முகாமில் ராணுவத் தளவாடங்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து, சிவகங்கை பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள், ஆயுதங்களைக் கையாளும் முறை, ராணுவத்திலுள்ள நவீன ரக துப்பாக்கிகள் கையாளும் முறை ஆகியன குறித்து ராணுவ வீரர்கள் மாணவர்களுக்கு விரிவாக விளக்கினர்.

இதனைத்தொடர்ந்து, ராணுவ வீரர்கள் செய்து காட்டிய மலை ஏறும் பயிற்சியை அங்கிருந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டனர். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சிவகங்கை அருகே ராணுவத்தளவாடங்கள் கண்காட்சி; ஆர்வமுடன் கலந்துகொண்ட மாணவர்கள்

இதையும் படிங்க: 'நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன்'- வடிவேலுவின் படத்துடன் விழிப்புணர்வு போஸ்டர்!

ABOUT THE AUTHOR

...view details