தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடமாடு மஞ்சுவிரட்டு: 153 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு - சருகனியில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை சருகனியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு பரிசுப் பெற்றுச்சென்றனர்.

வடமாடு மஞ்சுவிரட்டு..!:153 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
வடமாடு மஞ்சுவிரட்டு..!:153 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

By

Published : Jan 29, 2022, 9:34 PM IST

சிவகங்கை: தேவகோட்டை அருகே உள்ள சருகனியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு அனுமதி பெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது

வடமாடு மஞ்சு விரட்டு

இதில், 17 காளைகளும் 153 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஒவ்வொரு காளையைப் பிடிப்பதற்கும் 25 நிமிடம் ஒதுக்கப்பட்டது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இப்போட்டியில், முன்னாள் அமைச்சர் பாங்கரன், தேவகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் பிர்லா கணேசன் உட்பட ஏராளமான அதிமுகாவினர் கலந்துகொண்டனர்.

வடமாடு மஞ்சுவிரட்டு..!:153 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் மேற்பார்வையில் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 65க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மஞ்சுவிரட்டை கண்டு கழித்தனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் பிடிபடாத காளைகளுக்கும், அடக்கிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க:சிவகங்கையில் நடந்த மீன்பிடித் திருவிழா - இதன்நோக்கத்தைக் கேட்டா அசந்துபோவீங்க!

ABOUT THE AUTHOR

...view details