தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச ஆம்புலன்ஸ், கழிப்பறை: அரசியல் கட்சிகளுக்கு டஃப் கொடுத்த சுயேச்சை! - வெற்றி பெற்றால் இலவச ஆம்புலன்ஸ் சேவை, கழிப்பறை : மானாமதுரையில் வாக்குறுதிகளை வீசி அரசியல் கட்சிகளுக்கு டாப் கொடுத்த சுயேச்சை வேட்பாளர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ள சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ராஜேஸ்வரி இலவச ஆம்புலன்ஸ், கழிவறை கட்ட இடம் என வாக்குறுதிகளை முன்வைத்து வாக்கு சேகரித்துவருகிறார்.

Manamadurai Independent candidate promises Free ambulance and toilets in campaigning
Manamadurai Independent candidate promises Free ambulance and toilets in campaigning

By

Published : Feb 10, 2022, 5:11 PM IST

சிவகங்கை:தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பரப்புரை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒவ்வொரு பகுதியிலும் சுவாரஸ்யமான யுத்திகளைக் கையாண்டு வேட்பாளர்கள் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அரசியல் கட்சியினருக்குச் சவால்விடும் வகையில் சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் களத்தில் இறங்கிக் கலக்கிவருகின்றனர்.

மானாமதுரையில் வாக்குறுதிகளை வீசி அரசியல் கட்சிகளுக்கு டஃப் கொடுத்த சுயேச்சை வேட்பாளர்

இந்நிலையில் மானாமதுரை நகராட்சி 18ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ராஜேஸ்வரி என்பவர் தனது வார்டு மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படும் என்றும், அப்பகுதியில் வாழும் காட்டு நாயக்கன் மக்கள் கழிப்பறையில்லாமல் அவதியடைந்துவருகின்றனர்.

வெற்றிபெற்றால் இலவச ஆம்புலன்ஸ் சேவை, கழிப்பறை

எனவே, அப்பகுதியில் 2 சென்ட் இடத்தை விலைக்கு வாங்கி தானமாக வழங்கப்படும் என்றும், தான் வெற்றிபெற்றால் நகராட்சி நிதியில் அந்த இடத்தில் பொது கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படும் என்று வாக்குறுதிகளையும் வீசி அரசியல் கட்சிகளுக்கு டஃப் கொடுத்துவருகிறார்.

சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ராஜேஸ்வரியின் எதிர்பாராத செயல்களால், பிற வேட்பாளர்கள் மட்டுமல்ல வாக்காளர்களும் திக்குமுக்காடிவருகின்றனர்.

இதையும் படிங்க: அரசியல் அஜித்துக்கு வேண்டாம், நிம்மதியாக இருக்கட்டும் - சுசீந்திரன்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details