சிவகங்கை: மானாமதுரையை சேர்ந்த காமராஜ் (எ) சின்னதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் 3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நகராட்சியாக மாற்றப்பட்டது.
பட்டியலின மக்கள் அதிகம் இல்லை
மானாமதுரை நகராட்சியில் 32 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 45 வருடங்களாக மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இதில் பட்டியலின மக்கள் 5760 பேர் மட்டுமே உள்ளனர்.
ஆனால், தற்போது மானாமதுரை நகராட்சி சேர்மன் பதவி பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்டதாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, மானாமதுரை நகராட்சி சேர்மன் பதவியைப் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கி நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை சார்பாக 2022 ஜனவரி 17-ஆம் தேதி தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண் 11-யை ரத்து செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.