சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மூன்று மாதங்களுக்கு முன் காலமானார்.
'சோறு வடித்துப்போட ஆள் இல்லை!' - செல்போன் டவரில் ஏறியவர் மீட்பு - செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்
சிவகங்கை: காரைக்குடி அருகே செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தியவரை தீயணைப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
அவர் தனது மனைவி காலமான நிலையில் கல்லூரியில் படிக்கும் இரண்டு பெண் பிள்ளைகளும் மாமியார் வீட்டில் இருப்பதால் தனக்கு சோறு வடித்துக் கொடுக்கக்கூட ஆள் இல்லை எனவும், அனாதைபோல் வாழ்வதாகவும் அதனால் மாமியார் வீட்டிலுள்ள தனது குழந்தைகளை மீட்டுத் தரக் கோரிஇன்று திடீரென்று முத்துப்பட்டணத்தில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு உயர் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து அங்குவந்த தீயணைப்புத் துறையினர் மேலே ஏறி வெங்கடேஷிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மெதுவாக கீழே இறங்கவைத்தனர். இளைஞர் ஒருவர் செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.