தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரைக்குடி அருகே நாட்டு துப்பாக்கியால் மாமனாரை சுட்ட மருமகன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மாமனாரை நாட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிய மருமகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காரைக்குடி அருகே நாட்டுதுப்பாக்கியால் மாமனாரை சுட்ட மருமகன்
காரைக்குடி அருகே நாட்டுதுப்பாக்கியால் மாமனாரை சுட்ட மருமகன்

By

Published : Sep 20, 2022, 2:11 PM IST

சிவகங்கை: காரைக்குடி அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் குடித்துவிட்டு நாள்தோறும் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மனைவி இராக்கம்மாள் தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இரண்டு தினங்களாகியும் கணவனின் நடவடிக்கையில் மாற்றம் இல்லாததால் ராக்கம்மாள், காரைக்குடியில் உள்ள தனது மாமியாரை சந்தித்து தனது கணவரின் நடத்தை குறித்து புகார் கூறியுள்ளர். இந்நிலையில் ராக்கம்மாள் காரைக்குடி சென்றது அறியாத அவரது தங்கை மற்றும் தந்தை இருவரும் ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று அவரை கண்டித்துள்ளனர்.

இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ராமச்சந்திரன் தனது வீட்டில் பூட்டிவிட்டு வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியால் மாமனார் நாகப்பனை சுட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். விலா எலும்பில் குண்டு பாய்ந்த நிலையில் அலறியபடி கீழே சாய்ந்த நாகப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குன்றக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கணவர் உயிருடன் இருக்கும்போதே இறப்பு சான்றிதழ் பெற்று சொத்துக்களை சூறையாடிய மனைவி

ABOUT THE AUTHOR

...view details