சிவகங்கை: காரைக்குடிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (டிச. 24) வருகை தந்தார். அப்பொழுது அவரை வரவேற்று நகர் முழுவதும் கொடி கம்பங்கள் அமைப்பதற்கு விருதுநகரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் குத்தகை எடுத்திருந்தார்.
அதில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அணைப்பாளையம் பகுதியை சேர்ந்த வீரமலை என்பவர் கொடி கம்பம் நடுவதற்கு காரைக்குடிக்கு வந்தார். இரவு விழா முடிந்த பின் கொடி கம்பங்களை அகற்றும் பணி நடைபெற்றது.