தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கை அருகே மூதாட்டி கம்பியால் அடித்து கொலை - ஒருவர் கைது - சிவகங்கையில் மூதாட்டி கொலை

சிவகங்கை அருகே மூதாட்டியை கம்பியால் தாக்கி கொலை செய்ததோடு, மற்றொருவரையும் தாக்கி படுகாயங்கள் ஏற்படுத்தியவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 11, 2022, 2:33 PM IST

சிவகங்கை:நாட்டரசன்கோட்டை அருகே மாடு வைக்கோலை மேய்ந்த தகராறில் மூதாட்டி கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டதுடன் உடன் சென்ற மற்றொரு மூதாட்டி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கொலைவெறித் தாக்குதல் நடத்தி ஒருவரை படுகொலை செய்ததோடு, மற்றொரு மூதாட்டியையும் கடுமையாக தாக்கிய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

நாட்டரசன்கோட்டையை அடுத்த காராம்பட்டி கிராமத்தில் மாடுகள் வளர்த்து வந்த மூதாட்டி லெட்சுமி என்பவருக்கும், இவரது வீட்டின் எதிரே வசித்து வரும் கருப்பையா என்பவருக்கும் இடையே வைக்கோல்போரில் மாடுகள் மேய்ந்ததாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று (அக்.11) வயல் வேலைக்குச்சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த லெட்சுமியை, வழிமறித்த கருப்பையா திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த இரும்புக்கம்பியால் பலமாக தாக்கியதில் அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அதைத்தடுத்த மற்றொரு மூதாட்டியான ஆண்டிச்சியையும் அவர் பலமாக தாக்கியதில் அவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீசார், லெட்சுமியின் உடலை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு தப்பியோடிய கருப்பையாவை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இவ்வாறு சிவகங்கை அருகே கம்பியால் தாக்கி மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழக பெண் கேரளாவில் நரபலி... 2 பேரை துண்டு துண்டாக வெட்டி புதைத்த கொடூரம்...

ABOUT THE AUTHOR

...view details