தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நமது சமுதாயத்திற்கு நம்மால் முடிந்தவரை உதவ வேண்டும் என்கிற மனப்பான்மையை பிஞ்சு மாணவர்களின் மனதில் ஏற்படுத்த பள்ளியில் உண்டியலில் சேமிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மழலையில் உதவும் மனப்பான்மை! உண்டியலில் சேமிக்கும் பிஞ்சு மாணவர்கள்! இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிக்கம், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இந்த புதுமையான முயற்சியை கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கினார். இந்த முயற்சியில் உண்டியலில் பணம் சேமித்து நமது சமுதாயத்துக்கு உதவும் வகையில் மாணவர்கள் தானாகவே முன்வந்து வகுப்பில் உள்ள உண்டியலில் காசு போடுகின்றனர்.
பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலைக்கு செல்கின்றனர். அந்த நிலையிலும் பெற்றோர் தங்களுக்கு எப்போதாவது வழங்கும் பணத்தை பத்திரப்படுத்தி தன்னால் முடிந்த ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ என எவ்வளவாக இருந்தாலும் உண்டியலில் போடுகின்றனர். தங்களின் பிறந்த நாளில் பெற்றோர் தங்களுக்காக கொடுத்த பணத்தையும் உண்டியலில் போடுகின்றனர்.
மாணவர்களுக்கு இது போன்ற எண்ணங்கள் வளர ஆணி வேர் பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிக்கம் இந்த செயலளால் வறுமையிலும் பிறருக்கு உதவ வேண்டும் என்கிற மனித நேயம் வளர்கிறது. பிஞ்சு மனதில் நல்ல எண்ணங்கள் பசுமரத்து ஆணிபோல் பதிந்துவிடுகிறது. பிற்கால இளைய சமுதாயம் இன்னும் சிறப்பாக வளர இதுபோன்று செயல்பாடுகள் பெரிதும் நன்மை செய்யும் என்பது உறுதிப்படுகிறது.