சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கீழடி அருகே அமைந்துள்ளது கொந்தகை. இங்கு, தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இங்கு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.
முழுவதும் மூடப்பட்ட இந்தத் தாழிகளில் உள்ள எலும்புக்கூடுகளை ஆய்வுக்காக வெளிக்கொணரும் பணி இன்று நடைபெற்றது. மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபணுவியல் துறைப் பேராசிரியர், துறைத்தலைவர் குமரேசன் தலைமையில் இப்பணி இன்று தொடங்கியது.
இணை இயக்குனர் பாஸ்கர், அகழாய்வுப் பணிகளின் ஆலோசகர் சேரன் உள்ளிட்ட தொல்லியல் அலுவலர்களின் முன்பாக இன்று முதுமக்கள் தாழிகளில் உள்ள எழும்புக்கூடுகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. ஆரம்பநிலை ஈமச் சின்னங்களான முதுமக்கள் தாழிகள், கொந்தகை அகழாய்வில் தொடர்ந்து கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்காலம் குறித்த தகவல்களுக்காக எலும்புக்கூடுகளைச் எடுத்துச் சென்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மூலக்கூறு ஆய்வுகள் நடத்தப்படும் என தொல்லியல் துறை அலுவலர்கள் , மரபணு துறை பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொந்தகை அகழாய்வு: ஆய்வுக்காக முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடு - சிவகங்கை
கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியில் இன்று (ஏப்.23) எலும்புக்கூடுகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன.
கொந்தகை அகழாய்வு
இதையும் படிங்க:கரோனா பரவல்: இன்று தொடர் ஆலோசனையில் பிரதமர் மோடி!