சிவகங்கை: திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதிய உறை கிணறு ஒன்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
கீழடியில் கடந்த முறை நடைபெற்ற அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள் குறித்த தொல்லியல் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஏழாம் கட்ட ஆய்வில் முதன்முதலாக உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது மூன்று அடுக்குகள் மட்டுமே வெளியே தெரியும் நிலையில், மேலும் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உறையின் விளிம்பில் அழகிய வேலைப்பாட்டுகள் காணப்படுகின்றன. அதேபோன்று கடந்த 6ஆம் கட்ட அகழாய்வுப் பணியின் போது, சற்றேறக்குறைய 30 அடுக்குகளைக் கொண்ட உறை கிணறு அகரத்தில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் உறை கிணறுகள் அமைத்து தங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொண்ட தகவல் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
இதையும் படிங்க:கீழடி அகழாய்வில் சுடுமண் பாசி மணிகள்!