சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு பணிகள் இரண்டு மாதங்களாக நடந்துவருகின்றன. இந்த பணியில் இரும்பினாலான ஆணி, படிகமணி, தக்களி, ஆட்டக்காய்கள், தங்கத்திலான வளையல், தந்தத்திலான பகடைக்காய், சில்லுவட்டுகள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், பாசிகள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் 400-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டுபிடிப்பு - keeladi excavation findings
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் 400-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டயறியப்பட்டுள்ளன.
keeladi 8th phase excavation finds more than 400 artefacts
முன்னதாக, கீழடியில் ஏழு கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் கி.மு. 2600 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் பயன்படுத்திய 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறிப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தது. இதுவரை மூன்று குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க:கீழடி அகழாய்வு தளத்தில் தற்காலிக தொல்பொருள் கண்காட்சியகம்