சிவகங்கை:காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருதுசகோதரர்களின் 220 ஆவது குருபூஜை விழா இன்று (அக்.27) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் விழாவில் கலந்து கொண்டு மருதுசகோதரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், " சமூக நீதி கட்சி என தெரிவித்துக்கொள்ளும் திமுக அரசு சமூக நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய அரசு ஒரு சாரருக்கு மட்டும் இட ஒதுக்கீடு செய்தது அதனை மாற்றியமைத்து அனைத்து சமூகத்திற்குமான அரசாக செயல்பட வேண்டும். பிரச்சாரத்தின்போது, திமுக ஆட்சி அமைந்தால் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் ஐயாவின் பெயர் வைக்கப்படும் என கூறியது, அதை விரைவில் செயல்படுத்த வேண்டும்.