தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு கார்த்தி சிதம்பரம் வரவேற்பு - கார்த்தி சிதம்பரம்

துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதாவை வரவேற்பதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம் பேட்டி
கார்த்தி சிதம்பரம் பேட்டி

By

Published : Apr 27, 2022, 2:11 PM IST

சிவகங்கை: காரைக்குடியில் துணை பத்திரப்பதிவு அலுவலகத்தை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் தன்னிச்சை போக்கை தடுக்கும் விதமாகவே நிறைவேற்றப்பட்ட மசோதாவை வரவேற்கிறேன்.

இந்தியா கொடுக்கும் நிதி உதவியை இலங்கை தன்னிச்சையாக செலவழிக்க கூடாது. அதற்கென இந்தியாவிலிருந்து மூன்று அதிகாரிகளை நியமிக்க வேண்டும். காவல் நிலைய துன்புறுத்தல் மரணங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்தி சிதம்பரம் பேட்டி

தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் காவல்துறை துன்புறுத்தலால் மரணம் அடைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details