தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அவர்கள் ஹீரோக்கள் அல்ல’ - பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலைக்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு - கொலை வழக்கு

சிவகங்கை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் என கூறப்படுவோருக்கு தனிச்சலுகை கொடுப்பதை ஏற்க முடியாது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Karthik Chidambaram opposes release of seven Tamils!
Karthik Chidambaram opposes release of seven Tamils!

By

Published : May 21, 2021, 11:12 PM IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கார்த்தி சிதம்பரம், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்குவதை ஏற்க முடியாது.

மேலும் தமிழ்நாட்டில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க சட்டப்படி முடியும் என்றால் தமிழ்நாடு சிறையில் உள்ள அனைத்து கைதிகளையும் விடுவித்தால் எழுவர் விடுதலையில் ஆட்சேபனை இல்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர்கள் அவர்கள். ஹீரோக்கள் அல்ல, ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் அவர் மட்டும் இறக்கவில்லை. அவருடன் மொத்தம் 16 பேர் இறந்துள்ளனர். அவர்கள் பற்றி யாரும் பேசுவதில்லை" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details