தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடி ஒரு ஹிட்லர் - கார்த்தி சிதம்பரம் - ப. சிதம்பரம்

சிவகங்கை: ஜெர்மனியில் ஹிட்லர் எப்படி யூதர்களை ஒடுக்கினாரோ, அதேபோல் மோடி இஸ்லாமியர்களை ஒடுக்குகின்றார் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

File pic

By

Published : Mar 29, 2019, 11:53 AM IST

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி சார்பில் செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னாள் அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், தென்னவன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆா்.ராமசாமி சிவகங்கை நாடளுமன்ற காங்., வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

video

இந்த கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: இந்தியாவில் தற்போது நடக்கும் ஆட்சியில் இந்துவ கொள்கையை பின்பற்றாதவர்கள் இந்தியர்கள் அல்ல என்ற நிலையில் உள்ளது. அதிலும் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டும்தான் இந்தியாவின் சொந்தகாரா்கள், இன்னொரு தரப்பினர் இந்திய நாட்டிற்கு சொந்தமில்லை.

அதிலும் குறிப்பாக சிறிய சம்பவங்கள் நடந்தாலும், இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்றும் கூறிவருகின்றனர்.

ஜெர்மனியில் ஹிட்லர் எப்படி யூதர்களை ஒடுக்கினாரோ, அதே போல் மோடி இஸ்லாமியர்களை ஒடுக்குகின்றார் என்பதை உணரவேண்டும். எனவே இதுபோன்ற நச்சு சக்திகள் இந்தியாவில் மீண்டும் வரவிடக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details