சிவகங்கை:காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரை சேர்ந்தவர்கள் தங்கராஜ் - மாணிக்கவள்ளி தம்பதியினர். தங்கராஜ் குடும்பத்துடன் பிரான்சில் வசித்து பணிபுரிந்துள்ளார். இவர்களது மகன் கலைராஜன் பிரான்சில் உள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். பிரான்சை சேர்ந்த ஜான்லுயிக் - வெரோணிக் தம்பதியின் மகள் கயல் அதே கல்லூரியில் சைக்காலஜி படித்து வந்துள்ளார்.
கலைராஜனுக்கும் பிரான்ஸ் பெண் கயலும் நண்பர்களாக பழகி பின் அது காதலாக மலர்ந்தது. மூன்றாண்டுகளாக காதலித்து வந்தவர்களுக்கு நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரில் உள்ள கலைராஜனின் சொந்த கிராமத்தில் பிரான்ஸ் பெண் கயலின் தாய், சகோதரி, கலைராஜனின் உறவினர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து மணமகள் கூறியதாவது,”கல்லூரியில் இருந்து 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். பெற்றோர் சம்மதத்துடன், இந்தியாவில் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தோம். இந்தியாவில் தமிழகத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்வது சந்தோஷமாக உள்ளது, தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் எனக்கு மிகவும் பிடித்தமானது" என்றார்.