சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியினரின் பரப்புரை, வாக்குச் சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதி மாலை வரை தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ளலாம் எனத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
மானகிரி நான்கு சாலை சந்திப்பில் நடைபெற்ற பரப்புரை இதற்கிடையில் நேற்று (மார்ச் 31) சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
காரைக்குடி நகராட்சி ஐந்து விளக்கு பகுதியில் நடைபெற்ற பரப்புரை குறிப்பாக, மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகிலும் திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் பெரியகருப்பனை ஆதரித்து மானகிரி நான்கு சாலை சந்திப்பிலும் சிவகங்கை தொகுதி சிபிஐ வேட்பாளர் குணசேகரனை ஆதரித்து சிவகங்கை நகராட்சி அரண்மனை வாசல் பகுதியிலும் காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து காரைக்குடி நகராட்சி ஐந்து விளக்குப் பகுதியிலும் அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பரப்புரை பரப்புரையின்போது தொகுதிகளின் நிலவரம் குறித்தும் மக்களின் நிறை, குறைகள் குறித்தும் கேட்டறிந்த அவர், திமுக ஆட்சி அமைத்தவுடன் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும் தேர்தலில் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனப் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
சிவகங்கை நகராட்சி அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற பரப்புரை