சிவகங்கைஅருகே கோனார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணவனை இழந்த உதயசூரியா. இவருக்குத் திருமணமாகி 9 வயது மற்றும் 15 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், அருகில் உள்ள கல்லூரணி பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார்.
மூன்று பெண்கள், ஒரு ஆண் என ஐந்து பேருடன் பிறந்தவர் உதயசூரியா. இவரின் உடன்பிறந்த சகோதரர் ஆசைகண்ணன் பொறியியல் படித்து மஹாலெட்சுமி என்கிற பெண்ணுடன் திருமணமாகி தற்சமயம் சென்னை மெட்ரோவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கோயில் திருவிழாவுக்காக ஆசைகண்ணனும் அவரது மனைவியும் ஊருக்கு வந்துள்ளனர்.
தகராறு
இதனிடையே, உதயசூரியா தனது ஊரில் உள்ள அனைவருக்கும் பொதுவான இடத்தில் வீடு கட்டியுள்ளார். இதற்குக் கடனாக அவர் தம்பியிடம் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அவ்வப்போது உதயசூரியாவிற்கும் தம்பிக்கும் இடையே வீடு கட்டியதில் பணம் மற்றும் இடத்திற்கான தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில், திருவிழாவுக்கு கோயிலுக்கு செல்வதற்காக ஆசைகண்ணனும் அவரின் மனைவி மஹாலெட்சுமியும் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போது, வீட்டிற்குள் வரக்கூடாது என்று உதயசூரியா கூறவே, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அது குறித்து கேட்கச் சென்ற ஆசைகண்ணன் அங்கிருந்த இரும்பு கம்பியால் உதயசூரியாவை தலை மற்றும் கழுத்து பகுதியில் கொடூரமாகத் தாக்கி உள்ளார்.
அக்காவை கொலை செய்த தம்பி