தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 25, 2022, 7:38 PM IST

ETV Bharat / state

சிவகங்கை அருகே ரேக்ளாவில் சீறிப் பாய்ந்த காளைகள்

கல்லலில் கோயில் திருவிழாவையொட்டி நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்து வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Etv Bharat
Etv Bharat

சிவகங்கை அருகே ரேக்ளாவில் சீறிப் பாய்ந்த காளைகள்

சிவகங்கை:கல்லலில் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று (டிச.25) நடைபெற்ற மாட்டுவண்டி எல்லை பந்தயத்தில் 24 ஜோடி மாட்டு வண்டிகள் சாலையில் சீறிப்பாய்ந்தன. இந்தப் போட்டியில் மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 24 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், பெரிய மாட்டிற்கு 8 மைல் தூரமும், சிறிய மாட்டிற்கு 6 மைல் தூரமும், பந்தய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. பெரிய மாட்டுப் பிரிவில் 10 ஜோடி மாடுகளும், சிறிய மாடுகள் பிரிவில் 14 ஜோடி மாடுகளும் என மொத்தம் 24 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

சாலையில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டி பந்தயத்தை கல்லல், மானகிரி, பாதரக்குடி, நாச்சியாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சாலைகளின் இரு புறங்களிலும் கூடி நின்று உற்சாகமாக கண்டு ரசித்தனர். போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், அதன் சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தேனி அருகே கார் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details