தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டை உலுக்கிய கச்சநத்தம் மூவர் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு! - கச்சநத்தத்தில் போலீஸ் பாதுகாப்பு

தமிழ்நாட்டை உலுக்கிய கச்சநத்தம் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

kachanatham
kachanatham

By

Published : Jul 26, 2022, 9:17 PM IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி நள்ளிரவில், ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ஒரு பிரிவினர், சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 16 பேர் மீது பழையனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கானது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் சம்பவம் நடைபெற்ற கிராமத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:பூந்தமல்லி அருகே நபர் சரமாரியாக வெட்டி படுகொலை

ABOUT THE AUTHOR

...view details