சிவகங்கை:மானாமதுரை ஆனந்தவள்ளி நகரை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவர் மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடி ஆகிய பகுதிகளில் சூப்பர் மார்க்கெட் நடத்திவரும் நிலையில் இவருக்கு தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்த கவுர் மோகன்தாசிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் அவர் தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும் அதனை ராஜீவ் காந்திக்கு விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது உறவினர்கள் நண்பர்களிடம் சுமார் ரூ3.5 கோடி பணத்தை கடனாக பெற்ற ராஜீவ்காந்தி அந்தப் பணத்தை கவுர் மோகன் தாசிடம் வழங்கியுள்ளார். அந்தப் பணத்தை பெற்றுக்கொண்டு பொருளையும் வழங்காமல், பணத்தையும் வழங்காமல் கவுர் மோகன்தாஸ் இழுத்தடித்து செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து ராஜீவ்காந்தி மற்றும் அவரது நண்பர் பூமிநாதன் ஆகியோர் இணைந்து கவுர் மோகன்தாசை அவரது சொந்த ஊரில் இருந்து கடந்திவந்து பணத்தை கேட்டுள்ளனர். கவுர் மோகன்தாசின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ராஜீவ் காந்தி, பூமிநாதன் மீது தேனி மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து கவுர் மோகன்தாசை மீட்டு சென்றுள்ளனர்.