தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிங்கம்புணரியில் தடுப்பூசி போடும் பணி தீவிரம்! - சிங்கம்புணரியில் தடுப்பூசி போடும் பணி தீவிரம்

சிவகங்கை: சிங்கம்புணரி தாலுகா அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரோனா தடுப்பூசி
சிங்கம்புணரியில் தடுப்பூசி போடும் பணி தீவிரம்!

By

Published : May 9, 2021, 4:58 PM IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை பொறுத்தவரை கரோனா முதல் அலையிலும், தற்போது இரண்டாவது அலையிலும் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதியாகவே தமிழ்நாட்டில் இருந்துவருகிறது. இதே நிலை நீடிக்க சுகாதாரத் துறை சிறப்பான பணியை செய்துவருகிறது. சிங்கம்புணரி சுற்றுவட்டார மக்களுக்கு மேலும் பாதுகாப்பை உறுதி செய்ய கரோனா தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

சிங்கம்புணரியில் தடுப்பூசி போடும் பணி தீவிரம்!

தடுப்பூசி போட விரும்புபவர்கள், அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இணைய சேவையை பயன்படுத்தி பதிவு செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு பதிவு செய்ய ஆதார் அட்டையை எடுத்துவர பொதுமக்களை அலுவலர்கள் அறிவுறுத்துகிறார்கள். 10 பேர் கொண்ட எண்ணிக்கையில் பதிவு செய்த பின் அவர்களுக்கு மொத்தமாக தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

தடுப்பூசியின் இரண்டாவது தவணை இதே முறையை பின்பற்றி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து, அரசு கூறியுள்ள விதிமுறைகளை கடைபிடிக்குமாறு சுகாதார துறை வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'சித்திரை வெயிலுக்கு ஜில்லென்று மழை' - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details