சிவகங்கை:சிவகங்கையில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர், 'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் (Erode East By-Election 2023) திமுக கூட்டணிக்கே எங்களது ஆதரவு' எனத் தெரிவித்தார். சிவகங்கையில் தனியார் மண்டபத்தில் இன்று நடந்த (ஜன.22) இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் பசீர் அகமது பங்கேற்று சிறப்புரையாற்றினார். பின், மாவட்ட நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஒன்றிய அரசு சேது சமுத்திர திட்டத்தை (Sethusamudram Shipping Canal Project) நிறைவேற்றி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க முன் வரவேண்டும் என்றும், நதிநீர் திட்டங்களை உருவாக்கி தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.