சிவகங்கையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், காவிரி விவகாரத்தில் காவிரி ஆணையம் மற்றும் நீதிமன்றம் அளித்த உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எனது முழு ஆதரவு உண்டு.
தமிழ்நாட்டை புறக்கணிக்க முடியாது - கார்த்தி சிதம்பரம் - Tamil Nadu
சிவகங்கை: இந்திய அரசாங்கத்தால் தமிழ்நாட்டை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம்
காவிரி - குண்டாறு திட்டம் சாத்தியமான ஒன்றுதான். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.9 ஆயிரம் கோடி செலவாகும். இந்த திட்டம் அனைத்து மாவட்ட மக்களுக்கும் பயனளிக்கும் என்பதால் மத்திய அரசு தேவையான நிதியை வழங்க வேண்டும். மேலும் மக்கள் விரும்பாத திட்டங்களை ஒருபோதும் அரசாங்கம் கொண்டு வரக்கூடாது. அதேபோல் இந்திய அரசாங்கத்தால் ஒருபோதும் தமிழகத்தை புறக்கணிக்க முடியாது என்றார்.