சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
அப்போது அலுவலர்ளுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அது இரு தரப்பினருக்கிடையே மோதலாக மாறியது. இதனையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்டனர்.
கூச்சல், குழப்பம் அடிதடி நடந்ததால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆட்சியர் ஜெயகாந்தன் இருதரப்பினரையும் சமாதானம் செய்ததையடுத்து கூட்டம் மீண்டும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மோதலுக்கு காரணமான திருப்புவனத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் இன்று கைது செய்யப்பட்டார்.
விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நடைப்பெற்று மோதல்