தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 95% நிதி ஒதுக்கியதாக கூறினேன்’ - ஜே.பி.நட்டா விளக்கம் - JP Nadda AIIMS Trouble

‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 95% நிதி ஒதுக்கியதாகத்தான் கூறினேன்’ என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விளக்கம் அளித்துள்ளார்.

‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 95% நிதி மற்றும் கட்டமைப்பு ஒதுக்கியதாக கூறினேன்’ - ஜே.பி.நட்டா விளக்கம்
‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 95% நிதி மற்றும் கட்டமைப்பு ஒதுக்கியதாக கூறினேன்’ - ஜே.பி.நட்டா விளக்கம்

By

Published : Sep 24, 2022, 11:52 AM IST

சிவகங்கை: காரைக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கட்சி மற்றும் தனியார் நிகழ்வில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாடு வந்துள்ளார். இந்நிலையில் காரைக்குடியில் ஜே.பி. நட்டா, பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து கட்சி மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளிடம் பேசினார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜே.பி.நட்டா, “தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் பல்வேறு மக்களிடம் கலந்துரையாடியதில் அதிகளவில் பெண்கள், இளைஞர்கள் பாஜகவில் சேர நினைக்கின்றனர். அவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றனர்.

மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசாக இருந்தால் பணிகள் வேகமாக நடக்கும். இதைத்தான் மோடி சொல்கிறார். பாஜக ஆளும் மாநிலங்கள் சிறப்பாக உள்ளன. அதேபோல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா செய்தியாளர் சந்திப்பு

ஆனால் துரதிஷ்டவசமாக திமுக, மாநிலத்தில் ஆட்சி நடத்த தெரியாமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறி வருகிறது. சில விஷயங்களில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு பலன் கிடைக்கும். நான் சொன்னதை எம்பிக்கள் தவறாக புரிந்து கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மதுரை எய்ம்ஸ்க்கு 95 சதவீதம் நிதி, கட்டமைப்பு பொருட்கள் ஒதுக்கியதாகதான் கூறினேன். ஆனால் 95 சதவீதம் பணி முடிந்ததாக நான் சொல்லவில்லை. மோடி தமிழ்நாட்டிற்கு மிகுந்த ஆதரவு அளித்து வருகிறார். வளர்ச்சிக்கு தேவையான நிதியை அளித்து வருகிறார்.

திமுக, குடும்ப அரசியல், ஊழல், கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் வளர்ச்சி இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து துறையிலும் வளர்ச்சி இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க:மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95% நிறைவடைந்துள்ளன - ஜே.பி.நட்டா தகவல்

ABOUT THE AUTHOR

...view details