சிவகங்கை: திருப்பத்தூரில் நடைபெற்ற கூட்டுறவுத்துறை வார விழாவில் பங்கேற்ற அத்துறையின் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 என்பது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி இந்தியாவில் முதலமைச்சர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தக்க தருணத்தில் அறிவிப்பார். தேர்தலைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாளைக்கு வைத்தாலும் வெற்றி பெறுவோம்.
கூட்டணி குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். முதலமைச்சரை மக்கள் விரும்புகின்றனர். நம்புகின்றனர். இந்தியாவில் பொது விநியோக திட்டத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலம் தமிழ்நாடு தான். கூட்டுறவுத்துறையின் முன்னோடி தமிழ்நாடு தான்” எனத் தெரிவித்தார்.