சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘உச்சநீதிமன்றம் எனக்கு நல்ல அறிவுரை கூறியுள்ளது. அதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாட்டை சேர்ந்த யார் மத்திய அமைச்சரானாலும் அதை வரவேற்கிறேன். தேனியில் வெற்றி பெற்ற ரவீந்தரநாத் குமார், அந்த தொகுதி மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வார்" என்றும் தெரிவித்தார்.
'உச்ச நீதிமன்ற அறிவுரையை ஏற்கிறேன்..!' - கார்த்தி சிதம்பரம் - MP karthi chidambaram
சிவகங்கை: "உச்சநீதிமன்றம் கூறிய அறிவுரையை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்" என்று, நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற அறிவுரையை ஏற்கிறேன் -கார்த்தி சிதம்பரம்
முன்னதாக நேற்று ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,‘இந்த வழக்கை பார்க்கமால், உங்கள் தொகுதி மக்கள் நலனுக்கான விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்’ என்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.