சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் புல்வநாயகி அம்மன் கோயில் தேர்த்திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில், 16 காளைகள், 16 அணிகளைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளையை 25 நிமிடத்தில் அடக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அணிக்கு ஒன்பது பேர் களமிறக்கப்பட்டனர்.
பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி! இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு, அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும், கேடயம், கோப்பை, ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள், மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.