சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர், "சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெற்றது. அப்போது இருவேறு நபர்களின் முன் விரோதத்தை காரணமாக வைத்து இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் வகையில் கோயில் திருவிழாவில் மரியாதை வழங்கும் போது சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக நிகழ்வுகள் நடைபெற்றது. இருந்தபோதிலும் எவ்வித பிரச்னையுமின்றி கோயில் திருவிழா நிறைவடைந்தது.
இதுபோன்று கண்டதேவி கிராமத்தில் தொடர்ந்து இரு நபர்களுக்கு இடையே உள்ள தனிப்பட்ட பிரச்னை, இருதரப்பினர் மத்தியில் மோதல் ஏற்படும் வகையில் தொடர்ந்து தூண்டப்படுகிறது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் பிரச்னையை தீர்த்துக்கும் விதமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.