சிவகங்கை: சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் பல நூற்றாண்டுகளாக 5 கிராமத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கொக்கன் கருப்பன் கோயிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் இங்கு ஆடி களரியின் போது சாமியாடி வருவார்கள். புதிய நீதிமன்றம் கட்டுவதற்கு கொக்கன் கருப்பன் கோயில் இடத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வருகை தந்தார். அங்கு சாமிதரிசனம் செய்தபின் பலா கன்றை நட்டு வைத்தார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த இடத்தில் அரசு கட்டடம் கட்டினால் மக்கள் வழிபாட்டுக்கு இடையூறாக இருக்கும் என்று அமைச்சர் பெரியகருப்பனிடம் கூறியதாகவும் நீங்களே மாற்று இடம் சொல்லுங்களேன் என்று கூறியதாகவும் அதையும் மீறி சர்வே செய்தது அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். கோயில் இடம் சம்பந்தமாக இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் பேசியதாகவும் கூறினார்.
ஆளுநரை விமர்சனம் செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ஆளுநர் ரவி அவரது வேலையை மட்டும் பார்கிறார். திருநாவுக்கரசர் அவரது வேலையை மட்டும் பார்க்கட்டும். ஆளுநர் என்பவர் யார் ஏதோ சட்டமன்றத்தில் பாராளுமன்றத்தில் மெம்பராக இருந்துட்டோம் என்றதால் அறிவு ஜீவி கிடையாது. ஆளுநர் அரசாங்கத்திற்கே ஆலோசனை சொல்லி வழிநடத்துபவர். ஆளுநர் சனாதனம் பற்றி ராமகிருஷ்னா மெஷின்ல ஆன்மீகம் பற்றி பேசி இருக்கிறார். அங்கு போய் ஈவேரா சொன்னதையா ஆளுநர் பேசினாரா. ஆன்மீகம் பற்றி அங்குதான் பேசமுடியும். மேலும் கீழடியில் பற்றி அவர் கருத்து கூறியதாகவும் கீழடியில் 2,300 வருடம் பழமையானவர்கள் என்று கூறுகிறார்கள். 12,700 வருடத்தை எதுக்கு குறைக்கிறாய் என்று கூறினார். ஆளுநர் அவர்கள் அவரது வேலையை பார்க்கிறார். மக்களை வழி நடத்துகிற பணி ஆளுநருக்கு இருக்கு. அகம்பாவம் வேண்டாம் என்று திருநாவுக்கரசரை கேட்டுக்கொண்டார்.