சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டது.
தனியாரை முறியடிக்க அரசு பள்ளிகளில் புதிய திட்டம் -அமைச்சர் பாஸ்கரன்! - அமைச்சர் பாஸ்கரன்
சிவகங்கை: தனியார் பள்ளிகளை முறியடிக்கவே அரசு பள்ளிகளில் பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது என காதி கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
தனியாரை முறையடிக்க அரசு பள்ளிகளில் புதிய திட்டம் -அமைச்சர் பாஸ்கரன்!
இந்த விழாவில் காதி கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு சுமார் 16 ஆயிரம் மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார்.
இதனையடுத்து விழாவில் பேசிய அமைச்சர் பாஸ்கரன், மாணவர்களின் நலனுக்காக லேப்டாப், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் இவை அனைத்தும் தனியார் பள்ளிகளை அரசு பள்ளி மாணவர்கள் முறியடிக்கவே என தெரிவித்தார்.