தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டமளிப்பு விழாவில் அருகருகே நின்ற ஆளுநர் ரவியும், பொன்முடியும் - அருகருகே நின்ற ஆளுநர் ரவியும் பொன்முடியும்

Alagappa University 33th Graduation Day: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடமிருந்து மாணவ மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர். மேலும், அமைச்சர் பொன்முடியும் ஒரே மேடையில் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 22, 2023, 7:38 PM IST

Alagappa University 33th Graduation Day: பட்டமளிப்பு விழாவில் அருகருகே நின்ற ஆளுநர் ரவியும், பொன்முடியும்

Alagappa University 33th Graduation Day:சிவகங்கை:அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்ற 1,09,615 மாணவர்கள், இந்தாண்டு பட்டம் பெறுகின்றனர். இதில், 1124 மாணவ மாணவிகள் நேரடியாக தமிழ்நாடு ஆளுநரிடம் பட்டங்களைப் பெற்றனர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று (ஜன.22) காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், அப்பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி விழாவிற்கு தலைமை வகித்தார். அத்துடன், மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை அளித்தார்.

இதில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் Doctor of literature (D.Litt.) பட்டத்தை ஒருவரும் Doctor of Science (D.Sc.) பட்டத்தை 4 பேரும் 646 பேர் முனைவர் பட்டமும் பெற்றனர். மேலும் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பயின்ற 5,034 மாணவர்களும் இணைப்பு கல்லூரிகளில் பயின்ற 47,198 மாணவர்களும் இணைவு கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற 8,706 மாணவர்களும், தொலைநிலை கல்வி இயக்கத்தின் வாயிலாக பயின்ற 48,026 மாணவர்களையும் என மொத்தமாக 1,09,615 பேர் பட்டங்களைப் பெற்றனர். இதில், ஆளுநரிடம் 1,124 மாணவ மாணவியர்கள் நேரடியாக பட்டங்களைப் பெற்றனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

அண்மையில் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையின்போது, ஆளுநர் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து திமுகவின் அனைத்து அமைச்சர்கள் தரப்பிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், இந்த பட்டமளிப்பு விழாவில் திமுகவின் இரண்டு அமைச்சர்கள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ரவியுடன் ஒன்றாக ஒரே மேடையில் அமர்ந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறிப்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியின் வெளிநடப்பின் போது, சட்டப்பேரவைக்குள் அமர்ந்திருந்த அமைச்சர் பொன்முடி ஆளுநரின் பின்னால், ஆக்ரோசமாக கையை உயர்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈஷாவில் இருந்து வெளியே வந்த சுபஸ்ரீ மரண விவகாரத்தில் தீவிர நடவடிக்கை தேவை - நயினார் நாகேந்திரன்

ABOUT THE AUTHOR

...view details