சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள காமனேரி காட்டுவளவில் குடியிருக்கும் மாரப்பன். இவரது மகன் லோகநாதன் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். அவர் அதே கம்பெனியில் பணிபுரியும் பிரியா என்ற பெண்ணை காதலித்திருக்கிறார். ஆனால், பிரியாவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவனை பிரிந்து குழந்தைகளை பெற்றோர்களிடம் விட்டுவிட்டு கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் பழக்கம் எற்பட ஒரு வருடமாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
காதலன் வீட்டு முன்பு காதலி தர்ணா : காதலன் தலைமறைவு ! - salem
சேலம் : காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டி, சேலம் அடுத்த மேச்சேரியில் காதலன் வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

காதலன் வீட்டு முன்பு காதலி தர்னா
இந்நிலையில், பிரியா கர்ப்பம் அடைய லோகநாதன், கர்ப்பத்தை கலைத்து விடும்படி பிரியாவிடம் கூறியதாக தெரிகிறது. அவர் கேட்டுக்கொண்டதை அடுத்து பிரியாவும் அபார்ஷன் செய்துள்ளார். பின்னர், சில தினங்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரியா லோகநாதனிடம் வற்புறுத்தியுள்ளார்.
காதலன் வீட்டு முன்பு காதலி தர்னா : காதலன் தலைமறைவு !
இது குறித்து, மேச்சேரி காவல் நிலையத்தில் பிரியா புகார் அளிக்க இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி நஷ்ட ஈடாக லோகநாதனிடம் 1.5 லட்சம் ரூபாய் பேரம் பேசி வெரும் 10ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்தாக கூறப்படுகிறது. பணம் எதுவும் தனக்கு வேண்டாம் காதலனை சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து மேச்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, தலைமறைவான லோகநாதனை தேடி வருகின்றனர்.