தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனுஷ்கோடியில் சுற்றித்திரிந்த இலங்கை முன்னாள் காவலர்: சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைப்பு - தனுஷ்கோடியில் சுற்றித்திரிந்த இலங்கை முன்னாள் காவலர்

இலங்கையின் நிதி நெருக்கடி காரணமாக தனுஷ்கோடிக்கு வந்த இலங்கை முன்னாள் காவலரை தமிழ்நாடு காவலர்கள் எச்சரித்து சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

இலங்கை முன்னாள் காவலர்
இலங்கை முன்னாள் காவலர்

By

Published : Jun 10, 2022, 7:56 PM IST

சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அடுத்த தீடை கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றித்திரிவதாக அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ராமேஸ்வரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் தினேஷ் காந்தன் (36) என்பதும், இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இலங்கையில் சில ஆண்டுகள் போலீஸ்காரராக வேலை பார்த்து உள்ளார்.

பின்னர் போலீஸ் வேலையை விட்டு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் காந்தன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரம் வர முயற்சி செய்ததாகவும் அப்போது அவரை இலங்கை கடற்படையினர் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. பின்னர் காந்தன் விசாவுக்கு விண்ணப்பித்து விமானம் மூலம் கடந்த 8-ம் தேதி சென்னைக்கு வந்துள்ளார். அங்கிருந்து பேருந்து மூலம் ராமேஸ்வரம் வந்து தனுஷ்கோடிக்கு சென்று அங்கு சுற்றித்திரிந்துள்ளார்.

இலங்கை முன்னாள் காவலர்

அப்போது காந்தனின், நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டபோது, முதலில் படகு மூலம் ராமேஸ்வரம் வந்ததாக தெரிவித்த அவர், பின்னர் விமானம் மூலம் வந்த தகவலை தெரிவித்துள்ளார். எதற்காக இப்படி மாற்றி கூறினார் என்று கேட்டபோது, அகதிகள் முகாமில் தங்குவதற்காக என்றார்.

இதைத் தொடர்ந்து தினேஷ் காந்தனிடம் கியூ பிரிவு போலீசாரால் அவர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வந்தாரா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழ்நாடு வந்து அகதிகள் முகாமில் தங்கி வேலை செய்யலாம் என்று வந்ததாக தெரிந்தது. அவர் சொன்னதை உறுதி செய்த போலீசார், அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். அவர் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு திரும்பி செல்ல இன்னும் 11 நாட்கள் அனுமதி இருப்பது தெரியவந்ததால், அவரை எச்சரித்து சென்னை சென்று விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்கு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:ஆட்டோவில் கடத்தி சென்று இளைஞர் எரித்து கொலை: காவலர் உட்பட 5 பேருக்கு வலை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details