சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் சதாம் உசேன். இவர் தேவகோட்டை காந்தி ரோடு பகுதியில் மீன் மற்றும் கோழிக் கடை நடத்தி வருகிறார்.
தீ விபத்தில் மீன் கடை எரிந்து சாம்பல்! - சிவகங்கை
சிவகங்கை: தேவகோட்டையில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் மீன் மற்றும் கோழிக் கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
சில மாதங்களுக்கு முன்புதான் கடையை புதிதாக நிறுவினார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் கடை திடீரென்று தீப்பற்றி எரிந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் சதாமிற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சதாம் உசேன் வந்து பார்த்தபோது அவரது கடை முற்றிலும் எரிந்து சாம்பலாகிப் போனதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் தேவகோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து சதாம் உசேன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து தேவகோட்டை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.