சிவகங்கை: மானாமதுரையைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் - செல்வி தம்பதி. இவர்களின் மகள் விரேஸ்மா, தனது சிறு வயது முதலே ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடா, கன்னி நாய்கள், சண்டை சேவல் ஆகியவற்றைப் பாசமாக மிகுந்த அக்கறையுடன் வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.
இவற்றில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் சண்டை கிடா ஆகியவை காலப்போக்கில் இறந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (டிச.11) விரேஸ்மாவுக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடா, கன்னி நாய்கள் மற்றும் சண்டை சேவல் ஆகியவற்றை மணமேடையில் ஏற்றி, திருமண போட்டோ எடுத்துள்ளனர்.