சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பயிர் இன்சூரன்ஸில் காப்பீடு செய்த விவசாயிகளுக்குப் பணம் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் அரசு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் முன் அடித்து மாய்ந்துகொண்ட விவசாயிகள்: பதற வைக்கும் வீடியோ! - மாவட்ட ஆட்சியர் முன் அடித்து மாய்ந்துகொண்ட விவசாயிகள்: பதற வைக்கும் வீடியோ!
சிவகங்கை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு அது கைக்கலப்பில் முடிந்துள்ளது.
அப்போது, வேளாண் அலுவலர் பதில் கூறுகையில் விவசாயிகளுக்கும் அலுவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இரு தரப்பினர் வாக்குவாதம் செய்தபோது மோதல் ஏற்பட்டு, மாவட்ட ஆட்சியர் முன் ஒருவரையொருவர் அடித்து மாய்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இருதரப்பினரையும் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் சமாதானம் செய்ததையடுத்து கூட்டம் மீண்டும் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே விவசாயிகள் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.