தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

40 தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்: ப.சிதம்பரம்

சிவகங்கை: காங்கிரஸ் அரசு அமைந்தால் மின்னணு வாக்கு இயந்திரத்தில் சீர்திருத்தம் செய்யப்படும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

ப.சிதம்பரம்

By

Published : Apr 13, 2019, 10:30 PM IST

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நீட் தேர்வில் மாநில மக்களின் விருப்பத்தை பொறுத்துத்தான் நடைமுறைபடுத்தப்படும் எனவும், தமிழகத்தில் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என ராகுல் உறுதியாக கூறியுள்ளார்.


மேலும் 40 தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும், 543 தொகுதியில் தேர்தல் நடக்கிறது. ஆனால் எதிர்கட்சிக்காரர்களை நோக்கித்தான் வருமான வரித்துறை ஏவிவிடப்படுகிறது என்றும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகாரர்கள் மட்டும் வசதி படைத்தவர்களாக சித்தரிக்கும் ஆளும் கட்சிக்காரர்கள், அவர்கள் பஞ்ச பரதேசிகளாக உள்ளதால் வருமான வரித்துறையினர் கைப்பற்றும் பணத்தை அவர்களுக்கு தேர்தல் செலவிற்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள் எனவும் கிண்டலடித்தார்.

ABOUT THE AUTHOR

...view details