சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் ஆறாம் கட்டாயப் பணிகள் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கரோனா எதிரொலி: கீழடி அகழாய்வு தற்காலிகமாக நிறுத்தம் - Due to corona effect, Keezhadi 6th phase closed
மதுரை: கீழடியில் நடைபெற்றுவரும் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது.
Due to corona effect, Keezhadi 6th phase closed
இந்நிலையில் தமிழ்நாடு அரசு வருகின்ற மார்ச் 31ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து நேற்றிலிருந்து கீழடி ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு தொல்லியல் துறையின் துணை இயக்குநர் சிவானந்தம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க...இந்தியாவில் கரோனா பாதிப்பு 562ஆக உயர்வு!
TAGGED:
தொல்லியல் துறை அறிவிப்பு