சிவகங்கை:தேவகோட்டை அருகே நூறு குடும்பத்தைச் சேர்ந்த நரிக்குறவ இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்குவதற்காக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழு பரிந்துரையின் பேரில் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் வசித்து வந்த சிலருக்குப் பட்டா வழங்காமல், தற்போது வந்தவர்களுக்கு அந்த இடத்திற்கான பட்டா வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க நரிக்குறவர் மக்கள் சென்றனர்.