காரைக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக கலை இலக்கிய பாசறையின் மாநிலத்தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைமை அறிவிக்கும் முன்பே, அந்த கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் பெயர்களை அறிவிப்பது என்பது அக்கட்சி எப்படி கட்டுக்கோப்பாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
பாரதிய ஜனதாவிற்கு ஒரு தொகுதியில் ஐந்து பேர் ஓட்டு போட்டாலே ஆச்சரியம். நடக்காத காரியங்களை பேசுவது பாஜகவிற்கு வாடிக்கையாகி விட்டது.
தான் பேசியதையே சிறிது நேரத்தில், நான் பேசவே இல்லை என்று கூறுவது ஹெச்.ராஜாவின் பழக்கம். அவர் பேசாமல் இருந்தாலே பாஜகவிற்கு ஓரளவு வாக்குகள் கிடைக்கும்.
திமுகவின் தேர்தல் அறிக்கை மாணவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளது. வங்கியில் பிடித்தம் செய்யப்பட்ட பணம், மீண்டும் வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற திட்டம் அனைவரிடமும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் எழுந்துள்ளது" எனப் பேசினார்.